மணப்பாறை அருகே இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.55700 பணம் பறிமுதல்

0 212
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 20  மணப்பாறை அருகே இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற 55700 ரூபாய் பணம் பறிமுதல் : தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புதுகாலணி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பாரி என்பவரின் இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது உரிய ஆவணங்கள் இன்றி 55700 ரூபாய் ரொக்கப்பணமாக எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதை மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் ரைஸ் மில்லில் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஊதியம் வழங்கிட கொண்டு சென்றதும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.