சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள் ஒற்றுமை விழிப்புணர்வு பேரணி: துரை வைகோ எம்பி தொடங்கி வைத்தார்
திருச்சி, நவ.20 சர்தார் வல்லபாய் பட்டேல் 150 ஆவது பிறந்தநாள் விழா ஒற்றுமை விழிப்புணர்வு பேரணியை திருச்சி எம்பி துரை வைகோ கொடியசைத்து தொடங்கி வைத்தார்
சர்தார் வல்லபாய் படேல் 150ஆவது பிறந்தநாள் விழாவை ஒட்டி திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகம் . மை பாரத் யுகேந்திரா மற்றும் ஜமால் முகமது கல்லூரி ஆகியவைகள் இணைந்து ஒற்றுமை பேரணி நடைபெற்றது. இப்பேரணியை திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
இதில் மாணவர்கள் கைகளில் தேசிய கொடிகளை ஏந்தியும் . தேசிய ஒற்றுமை ஒட்டி விழிப்புணர்வு பதாகைகளையும் கைகளை ஏந்தியவாறு சென்றனர் . இப்பேரணி டிவிஎஸ் டோல்கேட் தலைமை தபால் நிலையம் வழியாக சென்று ஆர்சி பள்ளி அருகே முடிவடைந்தது இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.