மண்ணச்சநல்லூர் பகுதியில் தொடர் திருட்டு: பொதுமக்கள் அச்சம்
திருச்சி, அக். 13 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோவில் ஊராட்சியில் தொடர் திருட்டில் ஈடுபடும் மர்ம நபர்கள்.தொடர் திருட்டால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மண்ணச்சநல்லூர் அருகே நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் கடந்த செப்டம்பர் 20 ம் தேதி வீர ஆஞ்சநேயர் ஆட்டோ ஸ்டாண்டில் நின்றிருந்த ஆட்டோவில் (TN48AB6647) அருண்குமார் என்வரின் ஆட்டோ பேட்டரியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். அதேபோல் செப்டம்பர் 22 ம் தேதி பிச்சாண்டார்கோவில் பட்டத்தம்மாள் தெருவை சேர்ந்த பிரேம்குமார் என்பவரின் மாருதி ஆம்னி வேனை (TN48L5820) மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.மேலும் அக்டோபர் மாதம் 10ம் தேதி உத்தமர்கோவில் பீரங்கிமேடு அருகே நின்றிருந்த ஆம்னி வேனையும் (TN55AU8631) மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.தொடர் திருட்டால் பிச்சாண்டார்கோவில் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்த தொடர் திருட்டு சம்பவம் குறித்து வாகனத்தின் உரிமையாளர்கள் தனித்தனியே கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.ஆனால் திருட்டு சம்பவம் குறித்து இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை என பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
எனவே கொள்ளிடம் காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் கண்டுபிடித்து வாகனங்களை மீட்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.