குண்டூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்
திருச்சி, ஆக.29 திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் ஊராட்சியில் 2 நாள் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகம் தமிழக முழுவதும் பத்தாயிரம் இடங்களில் நடத்துவதற்கு முடிவு செய்து நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முண்டோர் முதல் நிலை ஊராட்சிக்கு உட்பட்ட குண்டூர் கிராமம்
திருவளர்ச்சிபட்டி அய்யம்பட்டி ஒன்னாவது வார்டு முதல் ஆறாவது வார்டு வரை உள்ள சுமார் 2,300 மக்கள் பயன்பெறும் வகையில் குண்டூர் அயன்புத்தூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று நடைபெற்றது,
இம்முகாமில் திருச்சி ஆர் டி ஓ அருள் தலைமை வகித்தார். தாசில்தார் தனலட்சுமி, சமூகத் திட்ட தனி தாசில்தார் தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை குத்து விளக்கு ஏற்றி தொடக்கி வைத்தார்
மேலும் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் குண்டூரை சேர்ந்த இளையராஜா என்பவருக்கு நத்தம் பட்டாவினை வழங்கினார், மேலும் இதே போல் குண்டூரை சேர்ந்த ஹரிஹரன் என்பவரிடம் அவரது தந்தை ஸ்ரீதரனுக்கு உண்டான இறப்பு சான்றிதழையும் குண்டூரைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவருக்கு வாரிசு சான்றிதழையும் வழங்கினார்
மேலும் சுகாதார துறை மூலம் அயன்புத்துரைச் சேர்ந்த ஹேமலதா குண்டூரை சேர்ந்த ராமாயி அயன்புதூரை சேர்ந்த மகிலா குண்டூர் பர்மா காலனியை சேர்ந்த அகிலா ஆகியோருக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும் வழங்கினார்
மேலும் முகாமில் கலந்து கொண்ட அனைத்து துறைகளையும் ஆய்வு செய்து பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் குறித்தும் அதற்கு தீர்வு காண்பது குறித்தும் கேட்டறிந்தார்.
இந்த முகாமில் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன் திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்த் மற்றும் அண்ணாதுரை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கௌரி குண்டூர் ஊராட்சி செயலர் சதீஷ் உட்பட பொதுமக்கள் அரசு அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.