மேட்டுப்பாளையம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
திருச்சி, செப்.6 திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே மேட்டுப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட 9 முதல் 15 வார்டு வரை உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் வாரசந்தை திடலில் நடைபெற்றது.
முகாமினை முசிறி சப்-கலெக்டர் சுஷ்ரீ சிவாங்கி குந்தியா துவக்கி வைத்து மனுக்கள் மீது விசாரணை செய்து பார்வையிட்டார். முசிறி தாசில்தார் லோகநாதன், மேட்டுப்பாளையம் பேரூராட்சி தலைவர் செளந்தரராஜன், துணைத்தலைவர் செல்வி கோவிந்தசாமி, செயல்அலுவலர் சதீஷ்கிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு துறை அலுவலர்கள் அரசின் திட்டங்கள் குறித்து மக்கள் மத்தியில் விரிவாக பேசினர். அதனைத்தொடர்ந்து பயனாளிகளுக்கு பட்டா, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, சுகாதாரத்துறை, வேளாண்மை துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் முகாமில் கலந்து கொண்டனர். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, வீட்டுமனை பட்டா, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட மனுக்களை பெற்றனர். முகாமில் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.