துவரங்குறிச்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாம்
மணப்பாறை அருகே துவரங்குறிச்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாமை மாநிலங்களவை உறுப்பினர் எம்.பி சல்மா மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது , திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணகுமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு இலவச ஊட்டச்சத்துபெட்டகம் வழங்கப்பட்டது
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே துவரங்குறிச்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக நலம் காக்கும் ஸ்டாலின் மாபெரும் மருத்துவ முகாமை மாநிலங்களவை உறுப்பினர் M.P சல்மா ,மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, மாவட்ட ஆட்சியர் சரவணகுமார், மற்றும் கட்சி நிர்வாகிகள் குத்துவிளக்கேற்றி முகாமினை துவக்கி வைத்தனர்.
மேலும் முகாமில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சைக்கான ஆலோசனை,எலும்பியல் மூட்டு சிகிச்சை,மகப்பேறு மருத்துவம்,குடும்ப நல மருத்துவம்,இதயவியல் , நரம்பியல் தோல்நோய் பல் ,காது மூக்கு தொண்டை மற்றும் போன்ற 17 வகையான மருத்துவங்களும் உரிய முறையில் மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தொடர்ந்து மருத்துவத் திட்டங்களான முதலமைச்சரின் விரிவான மற்றும் காப்பீடு திட்டம், மாற்றுத்திறனாளிச் சான்றிதழ், ABHA சுகாதார அட்டை, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி ஆகியவையும், மருத்துவ பரிசோதனைகளாக ரத்தப் பரிசோதனை, புற்றுநோய் பரிசோதனை, எக்ஸ்ரே , இசிஜி, எக்கோ மற்றும் யூ எஸ் ஜி ஸ்கேன் ஆகியவை இம் முகாமில் அமைக்கப்பட்டுள்ளன.மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு இலவச ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து முகாமினை மாவட்ட ஆட்சியர் , எம்பி, எம்எல்ஏ, பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளையும் மருத்துவத்தில் தரம் குறித்து கேட்டறிந்தனர்.
முகாமில் மருங்காபுரி சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமான சிகிச்சைக்காக வந்த வண்ணம் உள்ளனர்.