காவல்துறையினருக்கு த.வெ.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் நன்றி தெரிவித்தார்

0 24
Stalin trichy visit

திருச்சி, ஏப்.2  திருச்சி விமான நிலையத்தில் த.வெ.க தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன்  பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

த.வெ.க தலைவர் விஜய் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரம் செய்தார். அதற்கு போலீசார் உரிய முறையில் பாதுகாப்பு அளித்தனர். அதேபோல வருவாய் துறையினர் உள்ளிட்ட அனைத்து துறைகளின் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கினர். அவர்கள் அனைவருக்கும் விஜய் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

கரூர் சம்பவம் கூட்டு சதி என விஜய் பேசியது குறித்த கேள்விக்கு,
கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு நடந்து வருகிறது அது குறித்து நான் கருத்து கூறுவது சரியாக இருக்காது என்றார்.

Leave A Reply

Your email address will not be published.