த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரப் பயணம் : திருச்சி வந்த பொதுச் செயலாளர் ஆனந்த்
திருச்சி, செப்.6 திருச்சியில் இருந்து பிரச்சார சுற்றுப்பயணத்தை துவங்கும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அனுமதி கடிதத்துடன் மாநகர காவல் ஆணையரை சந்திக்க வந்த தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் ஆனந்த்
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் டிவிஎஸ் டோல்கேட்,தலைமை தபால் நிலையம்,
பாலக்கரை வழியாக சாலை மார்க்கமாக சென்று மரக்கடையில் வாகனத்தில் நின்று பேச உள்ளார். இந்த பயண திட்டத்தின் படி அந்தப் பகுதி வழியே செல்ல அனுமதி அளிக்குமாறு ஆனந்த் மனுவில் கூறியிருந்தார். இருப்பினும் போராட்டம் ஆர்ப்பாட்டம் பேரணி பொதுக்கூட்டம் ஆகியவை திருச்சி மாநகர் பகுதிகளில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதனைத் தொடர்ந்து ஆனந்த் மாநகரில் சில முக்கிய இடங்களைப் பார்வையிட சென்றுவிட்டு அந்த இடத்தை தேர்வு செய்து மீண்டும் மனுவில் குறிப்பிட்டு வழங்க உள்ளனர்.