திருச்சியில் டாக்ஸி ஓட்டுநர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

0 53
Stalin trichy visit

திருச்சி, பிப்.9  திருச்சி மண்டல போக்குவரத்து இணை ஆணையர் அலுவலகத்தின் முன்பு 300க்கும் மேற்பட்ட டாக்ஸி ஓட்டுநர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ஓட்டுநர்களின் பாதுகாப்பில் மீது இந்த விடியா திமுக அரசு எவ்வித அக்கறையும் காட்டவில்லை என ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுநர்கள் குற்றம் சாட்டி கோரிக்கைகளை வலியுறுத்தியும் கண்டனம் கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது 2018 க்கு பிறகு ஆட்டோ மீட்டர் கட்டணம் நிர்ணயம் செய்யாமல் உள்ளது.
விலைவாசி உயர்வு பெட்ரோல் டீசல் உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு புதிய மீட்டர் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் .

கால் டாக்ஸிகான கட்டண நிர்ணயம் செய்யப்படாமல் உள்ளது. உடனடியாக தமிழக அரசு பொதுவான கால் டாக்ஸிக்கான கட்டணம் நிர்ணயம் செய்து தர வேண்டும்.

பிற மாநிலங்களில் உள்ளது போல கோச் வாகனத்திற்கான ஷூட் பர்மிட்டை நீட்டித்து தர வேண்டும்.

புதிதாக போக்குவரத்து துறையில் பி எல் டி டி டி ஜிபிஎஸ் கருவிக்காக ரூபாய் 20ஆயிரம் கட்டண கொள்ளையை தடுக்க வேண்டும்.
அல்லது அரசு தங்களது செலவிலேயே அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக ஓட்டுநர்கள் வெளி மாநிலங்களுக்கு செல்லும்போது மிரட்டப்படுவதும் தாக்கப்படுவதுமாக ஒரு அபாய நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் இருந்து தமிழக ஓட்டுநரை பாதுகாக்க, தமிழக அரசால் பாதுகாப்புக் குழு அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.