இந்தியாவில் லாக்டவுன் நிலை வருவதற்கு வாய்ப்பு இல்லை: நாராயண திருப்பதி பேட்டி
திருச்சி, மார்ச் 28 திருச்சி பா.ஜ.க. அலுவலகத்தில் நாராயணதிருப்பதி செய்தியாளர் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில்,
இந்தியாவில் லாக்டவுன் நிலை வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று தான் உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது .
மோடி தலைமையிலான மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை பத்து சதவீதம் குறைத்து என்னை நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருந்த சிக்கலை தளர்த்தி இருக்கிறது. இதன் மூலம் விலை உயர்வு என்ற மக்கள் மீதான சுமையை மத்திய அரசு தன் மீது சுமத்திக் கொண்டிருக்கிறது. இதனால் மத்திய அரசுக்கான ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய் பாதிக்கிறது. மக்கள் நலனை கருத்தில் கொண்டு, கலால் வரி குறைப்பை தன் மீது சுமத்தி கொண்டுள்ளது. போர் காரணமாக உலக நாடுகள் அனைத்திலும் 30 சதவீதம் சமையல் எரிவாயு விலை அதிகரித்துள்ளது. பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும், மத்திய அரசின் சிறப்பான நிர்வாகத்தை மக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் எரிவாயு விலையில் எந்த வித மாற்றமும் தட்டுப்பாடும் இல்லாமல் கிடைக்கிறது. காங்கிரஸ் தி.மு.க. கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பொறுப் பின்றி பேசிக் கொண்டிருக்கின்றனர்.
பெட்ரோல் டீசல் கிடைக்காது என்ற வதந்தியை ஊடகங்கள் வாயிலாக பரப்பி, குழப்பம் விளைவித்து மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த மோசடியை பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசு திறம்பட கையாண்டு பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படாமல் செய்துள்ளது.இந்தியா மக்களின் தேவைக்கான கச்சா எண்ணெய் 47 நாடுகளில் இருந்து வாங்கிக் கொண்டிருக்கிறோம். அது தவிர நமக்கு தேவையான சமையல் எரிவாயுவில்
60% நாமே உற்பத்தி செய்யக்கூடிய அளவிற்கு திறனை பெற்றிருக்கிறோம். அதன் மூலம் 50,000 மெட்ரிக் டன் சமையல் எரிவாயுவை நாமே உற்பத்தி செய்து கொண்டிருக்கிறோம்.இன்னும் இரண்டு மாதங்களுக்கு தேவையான சமையல் எரிவாயு கையிருப்பில் உள்ளது.கச்சா எண்ணெய் கப்பல்கள் தடையின்றி வந்து கொண்டிருக்கின்றன.
அமெரிக்கா ஈரான் ஒரு சூழலுக்கு முன் நமக்கான கச்சா எண்ணெய் வருகையில், மத்திய அரசு முயற்சியில் தற்போது 70% வந்து கொண்டிருக்கிறது. அண்ணா பல்கலை பேராசிரியர் ஒருவர் மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார் எழுந்தது. தற்போது போலீசார் அவரை கைது செய்துள்ளனர்
.பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகத்தில், தொடர்ந்து பாலியல் வன்கொடுமை தொடர்பான பிரச்சனைகள் நடந்திருப்பது அரசின் மோசமான நிர்வாகத்தை காட்டுகிறது. பல பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்க கவர்னருக்கு இடையூறாக, மாநில அரசு முட்டுக்கட்டை போட்டுள்ளனர்.
மாநில அரசின் உரிமை என்ற பெயரில் கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தை கொள்ளையடிக்கும் இடமாக திமுக அரசு மாற்றியுள்ளது. இதனால் அங்குள்ளவர்கள் கட்டுப்பாடு இல்லாமல் செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பாலியல் குற்றங்களை தடுக்க தவறியதால், பள்ளிக்கல்வித்துறையில் சீரழிந்து கிடக்கிறது. பள்ளி, கல்லூரிகளில் மாணவியர் தொடர்ந்து பாலியல் தொல்லைக்கு ஆளாகும் கொடுமையான சமூக அவலம் நடக்கிறது. இதற்கு திமுக அரசு தான் முழு பொறுப்பேற்க வேண்டும். சிறப்பாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் மத்திய அரசு மீது தமிழக முதல்வர் குறை சொல்வது தவறானது.
மாநிலத்தில் தவறு நடந்திருக்கிறது | சரியாக நிர்வாகம் செய்யவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். திமுகவினர் ஐந்தாயிரம் அல்ல ஐந்து லட்சம் கொடுத்தால் கூட, பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கொடுக்காத திமுக மீண்டும் வரக் கூடாது
என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்