அப்துல் கலாம் பிறந்தநாளையொட்டி மக்கள் சக்தி இயக்கம் சார்பில் மரக்கன்று நடும் விழா
திருச்சி, அக்.15 டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்தநாள் முன்னிட்டு மக்கள் சக்தி இயக்கம் சார்பில் மரக்கன்று நடும் விழா
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் மற்றும் இளம் தலைமுறைக்கு ஊக்கமளித்த விஞ்ஞானி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு, மக்கள் சக்தி இயக்கம் சார்பில் திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா பள்ளி தலைமை ஆசிரியர் எழிலரசி தலைமையில் நடைபெற்றது.
விழாவை மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் கே.சி. நீலமேகம், மக்கள் சக்தி இயக்க மாநில நிர்வாகி வெ.ரா.சந்திரசேகர், லியாசுதீன் ஷெரீப், சிறப்பு விருந்தினர் 35 வது வார்டு கவுன்சிலர் சுரேஷ், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தனலெட்சுமி, விஸ்வநாதன் ஆகியோர் விழாவை சிறப்பித்தார்கள்.
விழாவில் “அப்துல் கலாம் அவர்கள் காட்டிய தன்னம்பிக்கை, கல்வி மீதான ஆர்வம், மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து கூறிய கருத்துக்கள் இன்றும் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக உள்ளன. அவரை நினைவுகூர்வது என்றால், நம் சூழலை பசுமையாக்குவதே சிறந்த மரியாதையாகும்,” என்ற வகையில் பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் இயக்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.
மக்கள் சக்தி இயக்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.