திருச்சி கிழக்குத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் செயல் வீரர்கள் கூட்டம்

0 15
Stalin trichy visit

திருச்சி, ஏப்.2 திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட திருச்சி கிழக்குத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் இனிகோ இருதயராஜை ஆதரித்து, அக்கூட்டணியின் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்குத் திருச்சி மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன் தலைமையில்
திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வரவேற்புரை ஆற்றினார். கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு முன்னிலை வகித்துச் சிறப்புரையாற்றினார் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ சிறப்புரையாற்றினார்.

வரும் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் திரு. இனிகோ இருதயராஜ் அவர்களைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வதற்கான தேர்தல் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. தலைவர்கள் உரை: கூட்டத்தில் கலந்துகொண்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தோழமைக் கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், களப்பணியின் அவசியம் குறித்தும் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும் சிறப்புரையாற்றினர்.
நிர்வாகிகள் வருகை: மாநகர, மாவட்ட அளவிலான கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் முன்னணித் தலைவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.