ஓடும் ரெயிலில் நகையை தவறவிட்ட பெண்ணிடம் ஒப்படைப்பு
திருச்சி, ஆக.18 புதுக்கோட்டையை சேர்ந்தவர் ராஜா முகமது. இவரது மனைவி நஸ்ரின் ஜகன் என்பவர் கடந்த 14 ந்தேதி சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார். அப்பொழுது புதுக்கோட்டையில் இறங்கும்போது நஸ்ரின் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போய் விட்டது. இதையடுத்து ரெயில்வே போலிசாருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் அங்கிருந்து தலைமை காவலர் கணேசன் , ராமேஸ்வரம் இருப்பு பாதையை தொடர்புகொண்டு பயணித்த பெட்டியை சோதனை செய்ய தங்கச்செயின் கிடைக்கப்பெற்றது. அதை திருச்சி ரெயில்வே காவல் நிலையத்திற்கு கொடுத்து அனுப்பி நகையை தவறவிட்ட நஸ்ரின் ஜெகனிடம் அடையாளம் காண்பித்ததின் பேரில் நஸ்ரினிடம் ஒப்படைத்தனர்.