வாலிபரை கடத்தி 3 பவுன் நகை – பணம் பறிப்பு

0 27
Stalin trichy visit

திருச்சி ஏப் 3  திருச்சி திருவரங்கம் அல்லித்துறை , வளையல் கார தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் சந்தோஷ் (வயது 18) இவர் பட்டவரத் ரோடு பகுதியில் தனது இருசக்கர வாகனத்துடன் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த மூன்று மர்ம ஆசாமிகள் சந்தோஷ்யிடம் தகராறில் ஈடுபட்டு பணம் கேட்டார்.பணம் கொடுக்க சந்தோஷ் மறுத்தத்தை தொடர்ந்து அவரை மர்ம ஆசாமிகள் 3 பேரும் மிரட்டி அவருடைய இருசக்கர வாகனத்தில் கடத்தி கொண்டு திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள உப்பனூருக்கு
அழைத்துச் சென்றுசந்தோஷை மிரட்டி அவருடைய ஜிபே மூலம் ரூ 35 ஆயிரம் பணத்தை மிரட்டி வாங்கிக்கொண்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த  சந்தோஷ் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவம் குறித்து சந்தோஷ் கோட்டை போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷை தாக்கி நகை பணத்தை பருத்தி சென்ற வர்ம ஆசாமிகளை வலை விசி தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.