லால்குடி நகராட்சி மன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் முறைகேடுகள் புகார்
திருச்சி லால்குடி நகராட்சி மன்ற கூட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் பற்றி அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த அதிமுக கவுன்சிலர்கள் – மௌனம் சாதித்த நகர்மன்ற ஆணையர் .
திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற கூட்டம் நகர் மன்ற தலைவர் துரைமாணிக்கம் தலமையில் ,நகராட்சி ஆணையர் புஹேந்திரி மேற்பார்வையில் நகர்மன்ற சாதாரண கூட்டம் நடைப்பெற்றது.
கூட்டத்தில் வார்டு நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் , தெருவிளக்குகள் , சாலை வசதிகள் , சாக்கடை வசதிகள் குறித்து கோரிக்கைகள் வைத்து விவாதங்கள் நடைப்பெற்றது.
மேலும் பொது நிதி வழங்குவதில் வெளிப்படத்தன்மை இல்லை என குற்றம் சாட்டி கணக்கு வழக்குகளை வெளிப்படையாக காண்பிக்க வேண்டும் என வலியுறுத்தியும் ,அதுவரை பொது நிதியை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தனர்.
மேலும் நகராட்சி அலுவலகம் கட்டிட கட்டுமான பணியின் நிதி குறித்த கணக்கு விவரங்கள் நகர்மன்ற கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நகர்மன்ற கட்டிட அலுவலகத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கு கிரவல் மண் அடித்ததில் பல முறைகேடு நடந்துள்ளதாகவும் நிதியை ஒதுக்குவதற்கு முன் மாமன்ற உறுப்பினர்களிடம் கேட்காமல் நகர் மன்ற தலைவரும் ,ஆணையரும் தனிச்சையாக செயல்படுவதாகவும் மேலும் அதிமுக கவுன்சிலர்கள் தங்களது வார்டு பகுதியில் புறக்கணிப்பதாக அடுக்கு அடுக்கான கேள்விகளை முன் வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் நகர்மன்ற கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.