+1 தேர்வு முடிவுகள் வெளியானது

0 272
Stalin trichy visit

தமிழ்நாடு, புதுச்சேரியில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 91.17% சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை http://tnresults.nic.inhttp://dge.tn.gov.in என்ற இணையதளங்களில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கும் தேர்வு முடிவுகளை குறுஞ்செய்தியாக அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் 4ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை  8,11,172மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் ,7,39,539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர் 4,04,143 (94.69%) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 3,35,396 (87.26%) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட 7.43% மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழக அளவில் கோவை மாவட்டம் 96.02 சதவிகிதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது. ஈரோடு 95.56 சதவிகிதத்துடன் இரண்டாமிடமும், திருப்பூர் 95.23 சதவிகிதத்துடன் மூன்றாமிடத்திலும் உள்ளன. 81.40 சதவிகிதத்துடன் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.