திருச்சி ஐஐஎம் (PGPBM) முதுகலைப் படிப்பில் 10வது பேஜ் தொடக்க விழா!
திருச்சி ஐஐஎம் வணிக மேலாண்மை முதுகலை திட்டத்தின் 10வது பேஜ் தொடக்க விழா இன்று நடைபெற்றது. சென்னை வளாகத்தை அடிப்படையாகக் கொண்ட இரண்டு வருட திட்ட வேலை செய்யும் நிர்வாகிகளுக்கு இடைவெளியை குறைப்பதற்காகவும், மாறும் தன்மையை நிவர்த்தி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட இந்த புதிய படிப்பினை இன்று தொடங்கி வைத்தனர்.
திருச்சி ஐஐஎம் பேராசிரியர் தீபக் ஸ்ரீவஸ்தவா வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து PGPBM முதுகலை மேலாண்மை படிப்பின் தலைவர் பேராசிரியர் கார்த்திக் தண்டபாணி கூறுகையில்… “55 மாணவர்கள் ஆரம்பிக்கப்பட்ட இந்த படிப்பானது மிகப்பெரிய அளவு வருடத்திற்கு 12.4 சராசரி அனுபவம் கொண்ட பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பின்னணி கொண்ட தனியார் மற்றும் பொதுத் துறையைச் சேர்ந்த மாணவர்கள் இதன்மூலம் பயனடைந்துள்ளனர். இப்படிப்பு குறித்து முக்கிய பங்கு வகிக்க முடியும்” என்பதை தெரிவித்தார்.
தொடர்ந்து இயக்குனர் டாக்டர் பவன்குமார், விழாவின் சிறப்பு விருந்தினராக பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் இயக்குனர் ஸ்ரீ வினோத்குமார் சிங் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு தங்களுடைய அனுபவங்களையும் படிப்பு குறித்த வளர்ச்சி செயல்பாடுகள் மற்றும் ஊழியர்களை மேம்படுத்துவதற்கான திறமைகள் என மாணவர்களின் எதிர்காலம் சிறக்க வாழ்த்தினார்கள்.
தொடர்ந்து கடந்த வருடம் PGPBM திட்ட படிப்பில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு தகுதி பட்டியல்களை அறிவித்தனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/Lsr0mGx2BtcHISoYvuFdGy