சரக்கு வாகனத்தை திருடிய 2 பேர் கைது
திருச்சி செப்.10 திருச்சி திருவானைக்காவல் கன்னிமார்த்தோப்பு, பகுதியை சேர்ந்தவர் மணிமாறன் (வயது31). இவர் அப்பகுதியில் செங்கல்சூளை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த செப்.8 ந் தேதி இவரது சரக்கு வாகனத்தை கன்னிமார்த்தோப்பு பகுதியில் நிறுத்தி வைத்துள்ளார்.அப்போது 3 மர்ம ஆசாமிகள் சரக்கு வாகனத்தை திருடி சென்றனர். உடனே மணிமாறன் ஜிபிஎஸ்- ஐக் கண்காணித்து, திருடிய நபர்கள் கல்லணை சாலையில் வாகனத்துடன் இருப்பதை கண்டறிந்தார்.
இதுகுறித்து புகாரின்பேரில் திருவரங்கம் குற்றபிரிவு போலீசார் வழக்கு பதிந்து லால்குடி தாளக்குடி பகுதியை சேர்ந்த கிரண்குமார் (வயது23) லால்குடி எசனக் கோரை பகுதியை சேர்ந்த சுந்தர் (வயது 31 ) ஆகியோரை கைது செய்து அவரிடமிருந்து சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர் .மேலும் நவீன் குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.