குளிர்சாதன எந்திரத்தில் இருந்த காப்பர் வயர் திருட்டு : 2 பேர் கைது
திருச்சி அக் 15- திருவரங்கம் மேலூர் ரோடு லட்சுமி நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 71 ) இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் அறையில் உள்ள ஏசியை ஆன் செய்தார்.அப்பொழுது ஏசி செயல்படவில்லை.இதையடுத்து குளிர்சாதன பெட்டி இருக்கும் வெளிப்பகுதிக்கு சென்று பார்த்த பொழுது அதில் இருந்த காப்பர் வயர் திருட்டுப் போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து சீனிவாசன் திருவரங்கம் போலீசில் புகார் கொடுத்தார்.புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருவரங்கம் அம்மா மண்டபம் பகுதியை சேர்ந்த பிரவீன் என்பவரை கைது செய்துஅவரிடமிருந்து 4 கி ஏசி காப்பர் வயரை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய விக்கி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.