இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது
திருச்சி அக் 15- திருச்சி திருவானைக்காவல் கொண்டையம்பேட்டை கரிகாலன் தெரு பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 40)இவர் தனது வீட்டுக்கு வெளியே இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார்.
இந்நிலையில் மர்ம ஆசாமி ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடி சென்று விட்டார். மறுநாள் காலை சிவகுமார் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்த பொழுது இருசக்கர வாகனம் திருட்டுப் போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் குறித்து சிவகுமார் திருவரங்கம் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் திருவரங்கம் ஆளவந்தான் நல்லூர் பகுதியை சேர்ந்த பதன்ராஜ் (வயது 19) என்பது தெரியவந்தது இதையடுத்து போலீசார் பதன்ராஜை கைது செய்து அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.