தடுப்புச்சுவரில் கார் மோதிய 2 பேர் பலி; 5 பேர் படுகாயம்!

0 391
Stalin trichy visit

சென்னை மதுரவயல் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், வானகரம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை உள்ளிட்ட 7 பேர் ஒரு காரில் கொடைக்கானல் சென்று விட்டு பின்னர் சென்னைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். கார் திண்டுக்கல்–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆசாத்ரோடு என்ற இடத்தில் சென்று

கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையப்பகுதியில் தடுப்புக் கம்பியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 6 பேர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் வழியிலேயே ஏழுமலை பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 5 பேர் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.