கஞ்சா விற்பனை செய்த ரவுடி உள்பட 3 பேர் கைது

0 13
Stalin trichy visit

திருச்சி அக் 15- திருவரங்கம் வடக்கு வாசல் பட்டர் தோப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக திருவரங்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த போது மூன்று பேர் நின்று கொண்டு இருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை செய்த போது திருவரங்கம் வடக்கு வாசல் பகுதியை சேர்ந்த தீபக் ராகுல் (வயது 22) திருவரங்கம் அடையவளஞ்சான் வீதி பகுதியை சேர்ந்த பிரசன்னா (வயது 25 )மிளகு பாறை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 29) தெரியவந்தது. மேற்கண்ட 3 பேரும் சேர்ந்து கஞ்சா விற்றுக்கொண்டு இருந்ததை உறுதி செய்தனர்.

இதையடுத்து போலீசார் தீபக் ராகுல், பிரசன்னா ஆகிய இரண்டு பேரை கைது செய்து அவரிடம் இருந்து 1,100 கிலோ கஞ்சா மற்றும் பணம் ரூபாய் 400 வரை பறிமுதல் செய்துள்ளனர்.இதில் பிரசன்னா ரவுடி பட்டியலில் உள்ளார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய கோபாலகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.