ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 3 பவுன் நகை திருட்டு
திருச்சி, பிப்.26 திருச்சி மாவட்டம் தா.பேட்டை அடுத்த பெருகனூர் நடுத்தெடு கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி சங்கீதா (34). இவர் சம்பவத்தன்று எருமப்பட்டி சென்று விட்டு மீண்டும் பெருகனூர் கிராமத்திற்கு வருவதற்காக பஸ்சில் வந்துள்ளார். அப்போது ஊரக்கரை பஸ் நிறுத்தத்தில் பஸ்சை விட்டு இறங்கி சென்ற போது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகை மாயமாகியது தெரியவந்தது. பஸ்சில் உடன் வந்த பெண் ஒருவர் பேச்சு கொடுப்பது போல் பேசி கொண்டு கவனத்தை திசை திருப்பி சங்கீதா கழுத்தில் அணிந்திருந்த நகையை திருடி சென்றது தெரியவந்தது. சம்பவம் குறித்து தா.பேட்டை போலீசார் வழக்கு பதிந்து நகையை திருடி சென்ற பெண்ணை தேடி வருகின்றனர்.