உணவு பொருட்கள் விநியோக ஊழியரிடமிருந்து 4 கிலோ ஹான்ஸ் பறிமுதல்
திருச்சி, ஆக.30 திருவெறும்பூர் அருகே உணவு பொருட்கள் டோர் டெலிவரி செய்யும் சோமேட்டோ (zomato) நிறுவன ஊழிய ரிடம் இருந்து 4கிலோ ஹான்சை திருவெறும்பூர் ஏ.எஸ்.பி தனிப்படை போலீசார் பறிமுதல்
திருவெறும்பூர் ஏ.எஸ்.பி. அரவிந்த் பனாவத் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் கல்லணை சாலையில் வந்த பிரபல உணவு பொருள் டெலிவரி செய்யும் (சோமேட்டோ) நிறுவன இருசக்கர வாகனத்தை மறித்துசோதனை செய்த பொழுது அதில்13 பண்டல்கள் 207 பாக்கெட் ஹான்ஸ் இருந்தது தெரியவந்தது அதன் எடை 4.14 கிலோகிராம் ஆகும் இதன் மதிப்பு ரூ8000 ஆகும் . அவரைப் பிடித்து விசாரித்த போது குளித்தலை சீக்கம்பட்டி ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த ராஜேந்திரன் (35) என்பது தெரியவந்தது அதன் அடிப்படையில் அவரை கைது செய்துதிருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரனை திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் திருச்சியில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.