ரயில்வே பென்ஷனர்ஸ் சங்கத்தின் 41ஆவது ஆண்டு விழா
திருச்சி, ஆக.19 பொன்மலை தென்பகுதி இரயில்வே பென்ஷனர்ஸ் சங்கத்தின் 41-ஆவது ஆண்டு நிறைவு விழா &2024-2025 பொது| மகாசபைக் கூட்டம் பொன்மலை டாக்டர் அம்பேத்கர் மக்கள் மன்றம் தலைவர் T.S.கணேஷ் தலைமையிலும், நாகராஜ், ஏ.வைகுண்டமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
சங்க செயலாளர் P.ராமசாமி 2024 – 2025 ம் ஆண்டறிக்கை வாசித்து, வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பொன்மலை ரயில்வே பணிமனை முதன்மை மேலாளர் ஆர்.சந்தோஷ்குமார் பட்ரோ, உதவி தொழிலாளர் நல அதிகாரி சுந்தரமூர்த்தி, உதவி கணக்கு அதிகாரி மணிகண்டன் கலந்துக் கொண்டார்கள்.