தி.மு.க. பேரூராட்சி கவுன்சிலர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4 சிறார்கள் உள்பட 6 பேர் கைது

0 100
Stalin trichy visit

திருச்சி, ஏப். 3  திருவெறும்பூர் அருகே திமுக பேரூராட்சி கவுன்சிலர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4சிறுவர்கள் உட்பட 6பேரை நவல்பட்டு போலீசார்கைது செய்துள்ளனர்

திருவெறும்பூர் அருகே உள்ள பாரதி புரத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (38 ) இவர் கூத்தை பார்பேரூராட்சி 11 வது வார்டு திமுக கவுன்சிலராக இருந்தார்.

மேலும் திருவெறும்பூர் பகுதியில் அரசு டாஸ்மார்க் பார் பார்ட்னர் ஷிப்பில் நடத்தி வந்தார் இந்த நிலையில் சோழ மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக வீடு கட்டி அங்கு குடிபோனதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 30 ஆம் தேதி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு புதுத்தெருவுக்கும் சோழமாதேவிக்கும் இடையில் இருசக்கர வாகனத்தில் வந்த பொழுது மர்ம நபர்கள் அவரை மரக்கட்டையில் தாக்கி பின்னர் தலையை வெட்டி சம்பவ இடத்தில் படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

இது சம்பந்தமாக திருச்சி எஸ்பிசெல்வன் நாகரத்தினம் திருவெறும்பூர் ஏ எஸ் பி அரவிந்த் பானாவத் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டதோடு உடனடியாக தனி படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை செய்து வந்ததுடன் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில்  நவல்பட்டு புது தெருவை சேர்ந்த கென்னடி மகன் கிரி (20) காட்டூர் கணேஷ் நகரை சேர்ந்த மகேந்திரன் மகன் மதன் ( 25 ) மற்றும் நான்கு சிறுவர்கள் என மொத்தம் ஆறு பேரை கைது செய்தனர்.  அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில்  ரஞ்சித்குமாரிடம் துவாக்குடி சேர்ந்த பாட்டில் மணி என்ற ரவுடி மாமுல் கேட்டதாகவும் அதற்கு ரஞ்சித்குமார் தனது தம்பிகளோடு சேர்ந்து நான் உனக்கு எதற்கு மாமல் தர வேண்டும் என மாமுல்தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் பாட்டில் மணி ரஞ்சித் குமாரை கொலை செய்ய வேண்டுமென திட்டமிட்டதாகவும் அதன் அடிப்படையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே திட்டமிட்டு இருந்தநிலையில் அவரது நண்பர்கள் மூலம் அதை நிறைவேற்ற முயற்சி செய்ததாகவும் அதற்கு முன்பாக சில வழக்குகளில் தேடப்படும் குற்ற வாழியாக இருந்த நிலையில் சேலம் சிறையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பாட்டில் மணி அடைக்கப்பட்டுள்ளான் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரஞ்சித் குமாரின் கால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு முறிந்ததால் ரஞ்சித் குமாரை கொலை செய்யும் திட்டம் தள்ளிப்போனதாகவும் தொடர்ந்து ரஞ்சித் குமாரை கொலை செய்யும் திட்டத்தை தீவிரபடுத்தியதாகவும் அதன் அடிப்படையில் ரஞ்சித் குமார் வீட்டில் இருந்து திருவெறும்பூர் பகுதிக்கு வந்து உள்ளதை அறிந்த பாட்டில் மணி கூட்டாளிகள் திட்டமிட்டு ரஞ்சித் குமாரை 30 ஆம் தேதி இரவு திருவெறும்பூர் பகுதியில் சோழமாநகர் நோக்கி நவல்பட்டு புது தெருவிற்க்கும் சோழமாதேவிக்கும் இடையில் பைக்கில் வந்த பொழுது அந்த பகுதியில் உள்ள மரக்கிளையால் ரஞ்சித் குமார் தலையில் அடித்ததாகவும் அதில் ரஞ்சித் குமார் நிலை தடுமாறி கீழே விழுந்ததாகவும்

பின்னர் அங்கிருந்து தப்பி ஓட ரஞ்சித் குமார்முயற்சித்ததாகவும் அதற்கு ரஞ்சித் குமார் தலையிலும் காலிலும் மாறி மாறி சரமாரியாக  வெட்டியதை தொடர்ந்து சம்பவ இடத்திலேயே ரஞ்சித்குமார் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் அதனைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பி சென்றதாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இந்த நிலையில் கிரி மற்றும் மதன் ஆகிய இருவரையும் திருச்சி மூன்றாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ராஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் சிறுவர்கள் நான்கு பேரையும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.