திருச்சியில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையில் அதிரடி சோதனை – பொது மேலாளர் ரவீந்திரனிடம் இருந்து கணக்கில் வராத 6 லட்சம் பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் – வங்கியில் வைக்கப்பட்டுள்ள லாக்கரில் இன்று சோதனை செய்து வரும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மேற்க்கொண்டுள்ளனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் மாவட்ட தொழில் மையம் செயல்பட்டு வருகிறது.
அந்த அலுவலகத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு மானியம் வழங்குதல், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் கடன் உதவி பெற்று தருதல் போன்ற பல்வேறு பணிகள் நடைபெறுகிறது.
இது போன்ற பணிகள் செய்ய அங்கு வரும் மக்களிடமிருந்து லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் கிடைத்தது – இதனையடுத்து நேற்று மாவட்ட தொழில் மையத்தில் அதிரடியாக லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது,இதில் நேற்று மாலை கணக்கில் வராத 3 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
இதனை அடுத்து உறையூரில் உள்ள பொது மேலாளர் ரவீந்திரன், திருவெறும்பூரில் உள்ள உதவி பொறியாளர் கம்பன் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் இரு குழுக்களாக சென்று அதிரடியாக சோதனை நடத்தி வந்தனர்.
இந்த அதிரடி சோதனையில் பொது மேலாளர் வீட்டில் 6 லட்சம் பணம் மற்றும் ஆவணங்கள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் – இதேபோல் அவர் அலுவலகத்தில் 3 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது – இதேபோல் பொது மேலாளர் ரவீந்திரன் தனியார் வங்கியில் லாக்கரில் நகைகள் வைத்துள்ளதாக கிடைத்த தகவல் அடிப்படையில் தற்போது லாக்கரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.