புகையிலைப் பொருட்களை விற்ற 9 பேர் கைது

0 225
Stalin trichy visit

திருச்சி அக் 17-திருச்சி உறையூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட உய்யக் கொண்டான் திருமலை ஆனந்தி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட்ட வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உறையூர் சப்-இன்ஸ்பெக்டர் நளினி தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது புகையிலைப் பொருட்களை விற்றுக் கொண்டிருந்த கலையரசி (வயது 45 ) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 100 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

உறையூர் பாண்டமங்கலம் பொது கழிவறை அருகில் புகையிலைபொருட்களை விற்றுக் கொண்டிருந்த ஸ்டீபன் ராஜ் (வயது 43) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 100 கிராம் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
திருச்சி கே கே நகர் பகுதியில் மன்னார்புரம் ராணுவ மைதானம் அருகில் புகையிலைப் பொருட்களை விற்றுக் கொண்டிருந்த கருமண்டபம் பகுதியை சார்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 53) என்பவரை கேகே நகர் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் கைது செய்து அவரிடம் இருந்து 850 கிராம் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தார்.

ஏர்போர்ட் பகுதியில் புகையிலை பொருட்களை விற்றுக் கொண்டிருந்த சலீம் (வயது 29) என்பவரை சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கைது செய்து அவரிடமிருந்து 80 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளார்.

கோட்டை போலீஸ் உட்பட்ட கரூர் பைபாஸ் சாலையில் புகையிலைப் பொருட்களை விற்றுக் கொண்டிருந்த திருப்பதி (வயது 55) என்பவரை சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் வழக்கு பதிவு செய்து கைது செய்து அவரிடம் இருந்து 150 கிராம் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

மேற்கண்ட 9 பேரும் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர்.
இதேபோன்று பாலக்கரை தில்லைநகர் உறையூர் பகுதிகளில் புகையிலைப் பொருட்களை விற்றதாக சந்தானம் வயது 72நபிஷா (வயது 60) முஹம்மது ஆரிப் (வயது 40) சாந்தி (வயது 43) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும்
மேற்கண்ட அனைவரையும் போலீசார் ஜாமினில் விடுதலை செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.