10 கிலோ தங்கம் கொள்ளை சம்பவத்தில் 97 சதவீதம் மீட்கப்பட்டுள்ளது: எஸ்.பி. பேட்டி

0 253
Stalin trichy visit

திருச்சி, அக்.10  பத்து கிலோ தங்கம் கொள்ளை சம்பவத்தில் 97 சதவீதம் மீட்கப்பட்டுள்ளது என்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் தெரிவித்தார்.

திருச்சி சமயபுரம் அருகே  சென்னையை சேர்ந்த நகைக்கடை ஊழியர்கள் சென்ற காரை மறித்து, மிளகாய்பொடி தூவி ரூ.10 கோடி மதிப்புள்ள 10 கிலோ நகைகளை கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கார் டிரைவர் பிரதீப்(வயது 24), அவருடைய நண்பர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அனுமன்ராம்(21), கைலாஷ்(20), வினோத் என்ற பன்னாராம்(31), முகமது சோகைல்(21), மனோகர்ராம்(27), மணீஸ்சிரோகி(19), மங்கிலால் கனாராம் (22) மற்றும் விக்ரம் ராம்நிவாஸ் ஜாட் (18) ஆகியோருடன் கூட்டு சேர்ந்து நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது. மேலும் தங்க நகைகளுடன் மங்கிலால் கனாராம், விக்ரம் ராம்நிவாஸ் ஜாட் ஆகியோர் மும்பைக்கு தப்பி சென்றனர்.

பின்னர் இவர்களில் ஏழு பேரை தமிழக காவல்துறையினர் கைது செய்தனர்.
ராஜஸ்தானைச் சேர்ந்த இரண்டு பேரை மத்திய பிரதேச போலீசார் கைது செய்து நகை பணத்தை கைப்பற்றினர். பின்னர் வட மாநிலத்தைச் சேர்ந்த கணவன் மனைவி உள்பட மூன்று பேரை மேலும் போலீசார் கைது செய்தனர் ஆக மொத்தம் இந்த வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அலுவலகத்தில் இன்று கைதான 12 பேரையும்
எஸ் பி செல்வ நாகரத்தினம் காண்பித்தார். மேலும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நகை பணம் சொகுசு கார் துப்பாக்கி ஆகியவற்றை காண்பித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்..
பின்னர் செல்வ நாகரத்தினம் நிருபர்களிடம் கூறும்போது, இதில் முக்கிய குற்றவாளி கார் ஓட்டுநர் பிரதீப் தான். இந்த வழக்கில் மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்களிடமிருந்து 9.9 கிலோ நகையை மீட்டுள்ளோம் அதேபோல பணத்தையும் மீட்டுள்ளோம் கொள்ளையடிக்கப்பட்டதில் 97 சதவீதம் நகை மற்றும் பணம் மேற்கப்பட்டுள்ளது கைது செய்யப்பட்டவர்களில் தமிழ்நாட்டில் வேறு வழக்குகள் இல்லை ஐந்து பேருக்கு வட மாநிலங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது என்றார்.

Leave A Reply

Your email address will not be published.