சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தைமுன்னிட்டு, திருச்சி எடமலைப்பட்டி புதூர் அருகே உள்ள கார்மல் பல்நோக்கு சமூக கூடத்தில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தமிழக அளவிலான சதுரங்கப்போட்டி இன்று துவங்கியது. 2 நாள் நடைபெறும் இந்த போட்டியில் சென்னை, கன்னியாகுமரி, மதுரை, சேலம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியை கும்பகோணம் அருட்தந்தை பிரிட்டோ விட்டு துவக்கி வைத்தார். சிகரம் சமூக பல்நோக்கு சேவை மையம் மற்றும் வெற்றி பொதுநல சங்கம் இணைந்து நடத்தி வருகின்றனர்.