மரத்தில் தூக்கிடப்பட்ட நிலையில் பெண் சடலம் – திருச்சி அருகே பரபரப்பு

0 690
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி மருங்காபுரி ஒன்றியத்துக்குட்பட்ட நல்லூர் ஊராட்சியில் பில்லுப்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள் (60). இவரது மனைவி இளஞ்சியம் (50). இவர்களுக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளனர். அனைவருக்குமே திருமணமான நிலையில் பெருமாள் மற்றும் இளஞ்சியம் ஆகியோர் வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விவசாய நிலத்தில் ஆடு மாடு மற்றும் கோழி வளர்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று அவருடைய விவசாய நிலத்திற்கு அருகில் வனப்பகுதியில் ஆடு மாடுகளை மேய்ப்பதற்காக சென்றே களஞ்சியம் நீண்ட நேரம் ஆகியும் வராததால் அவருடைய கணவர் பெருமாள் தேடிச் சென்றுள்ளார். அப்போது இளஞ்சியம் அரை நிர்வாண கோலத்தில் மரத்திலே தூக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு கதறி அழுது உள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் மணப்பாறை டிஎஸ்பி பிருந்தா மற்றும் துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

மேலும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் இளஞ்சியத்தின் செல்போனை காணவில்லை என்றும், ஆடு மாடுகள் கட்டும் இடத்தில்  வளையல்கள் உடைந்து கிடப்பதாகவும், உடலில் ஆங்காங்கே காயங்கள் ஏற்படுள்ளதால் முன்விரோதம் காரணமாக அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்து வருகின்றனர். தூக்கிடபட்ட நிலையில் இருந்ததால் உறவினர்கள் மற்றும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறியhttps://chat.whatsapp.com/Lsr0mGx2BtcHISoYvuFdGy

Leave A Reply

Your email address will not be published.