தேவையில்லாத லிங்கை “க்கிள்” செய்தால் வங்கி கணக்கில் இருந்து பயம் போயிரும்!

0 257
Stalin trichy visit

திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பொதுமக்கள் தங்கள் வங்கி கணக்கை கே.ஒய்.சி. அப்டேட் செய்ய வேண்டும், ஆதார் கார்டை அப்டேட் செய்ய வேண்டும், ஏ.டி.எம். கார்டு பிளாக் ஆகிவிட்டது, இது போன்ற காரணங்களுக்காக அறிமுகம் இல்லாத தொலைபேசி எண்களில் இருந்து உங்களது செல்போனிற்கு வரும் குறுஞ்செய்தியில் (எஸ்.எம்.எஸ்.)

உள்ள லிங்கை-ஐ கிளிக் செய்தால், வங்கியின் வலைதளம் போல் போலியான திரை தோன்றும், அதில் உங்களது பெயர் மற்றும் ரகசிய எண்ணை எண்டர் செய்தவுடன், உங்களின் மொபைல் நம்பருக்கு வரும் ஓ.டி.பி-ஐ அதில் கொடுத்தவுடன்,

உங்களது வங்கிகணக்கில் உள்ள பணம் உடனடியாக திருடப்பட்டுவிடும். எனவே பொதுமக்கள் இதுபோன்ற செல்போனிற்கு வரும் குறுஞ்செய்தியில் உள்ள லிங்கை-ஐ கிளிக் செய்யாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.