சாந்திவனம் ஆதரவற்றோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கினார் – திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் ஆனி விஜயா

0 401
Stalin trichy visit

திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் ஆனிவிஜயா சாந்திவனத்திற்கு வருகை புரிந்து மதிய உணவு வழங்கினார்கள். மேலும், இக்கொரனா காலத்தில் சாந்திவனம் வளாகத்தை மிகத்தூய்மையாக பராமரிப்பதுடன் பயனாளிகள் அனைவரையும் தக்க பாதுகாப்புடன் பராமரிப்பதற்கு பாராட்டு தெரிவித்தார். . இச்சேவையை சிறப்பாக செய்துவரும் நிறுவனத்தைச் சேர்ந்த அனைவருக்கும் மிகுந்த பாராட்டுக்களும், நன்றிகளும் உரித்தாகட்டும் என்று கூறினார்கள். உறைவிட பயனாளிகள் அனைவரும் வெகு விரைவாக குணம் பெற்று அவரவர் குடும்பத்தாருடன் சேர வேண்டும் என்று கூறினார்கள். இந்நிகழ்வில் DIG அலுவலக உதவி ஆய்வாளர் திரு. விஜயகிருஷ்ணன் அவர்கள், தோகமலை காவல் நிலைய ஆய்வாளர் திரு. காசி பாண்டியன் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவில் பயனாளிகள் அனைவருக்கும் ஸ்நாக்ஸும் வழங்கிச் சென்றார்கள்.

 

Leave A Reply

Your email address will not be published.