தற்கொலை தீர்வாகாது… மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய விக்ரம்

0 271
Stalin trichy visit

தற்கொலை தீர்வாகாது…

இன்றைய மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய -விக்ரம்

திருச்சி தூய வளனார் (ST Joseph ) கல்லூரியில் நடைபெற்ற “கோப்ரா”
பட ப்ரமோசனில் கலந்து கொண்ட அப் படத்தின் கதாநாயகன் விக்ரம் மாணவர்களிடையே உரையாற்றினார்.
அதில்

திருச்சி என்றாலே எனக்கு சாமி படம் தான் ஞாபகத்திற்கு வரும்.
பள்ளி பருவத்தில் திருச்சியில் Sports-ல் கலந்து கொள்ள வந்திருக்கிறேன்.
கோப்ரா திரைப் படம் ஒரு Science Fiction, Emotion கலந்த படம்.

இருமுகன் படத்தை தாண்டி “அதுக்கும் மேல இருக்கும்.
நல்ல புதவிதமான படமாக இருக்கும்.

ஒரு வாரத்தில் படம் வெளியாக உள்ளது. மிகவும் சந்தோஷமாக உள்ளது.

கதாநாயகி ஸ்ரீநிதி செட்டி கல்லூரி மாணவியாக, ஆராய்ச்சியாளராக நடித்துள்ளார்.

என் அப்பா IAS படிக்க சொன்னார். நான் கல்லூரிக்கே செல்லவில்லை. எனது நாட்டம் முழுவதும் திரைத்துறையில் தான் இருந்ததாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து மாணவர்களுடன் உரையாடிய சீயான் விக்ரம்,

சினிமா என்றால் எனக்கு பைத்தியம்.
தற்போது கூட கேவலமாக (தாடி) இருப்பேன். அது குறித்த கவலை எனக்கு இல்லை எனது எண்ணம் முழுவதும் சினிமாதான். என்னுடைய அடுத்த படத்திற்காக தாடி வளர்த்துக் கொண்டிருக்கிறேன்.
எனது ரசிகர்கள் சிலர் பச்சைக் குத்தி கொள்கிறார்கள். ஆனால் அவர்களை நான் சந்திக்க கூட முடியாது. ஆயினும்
என் மீது பாசத்துடன் உள்ளனர்.
இதெல்லாம் எனக்கு கடவுள் கொடுத்த வரம்.

நீங்கள் எவ்வளவோ சிரமங்களை கடந்து வந்துள்ளீர்கள். ஆனால்,இப்போதுள்ள மாணவர்கள் சின்ன விஷயத்துக்கெல்லாம் கொலை செய்து கொள்கிறார்களே? என்ற மாணவரின் கேள்விக்கு பதில் அளித்த விக்ரம்,

தற்போதைய தலைமுறை அப்படி ஆகிவிட்டது.
உங்களுக்கு எதில் ஆர்வம் உள்ளதோ? அதை உறுதியாக செய்ய வேண்டும்.
விபத்துக்குள்ளான நான் நடக்கவே முடியாது என மருத்துவர்கள் கூறிய நிலையில்
வைராக்கியத்துடன் நடந்து நடிக்க ஆரம்பித்தேன் என சினிமா மீதான தனது காதலையும் தனது மன உறுதியையும் வெளிப்ப
டுத்தினார்.

பொன்னியின் செல்வன் குறித்த கேள்விக்கு பதில் அளித்த விக்ரம்,

பொன்னின் செல்வன் கதை சூப்பராக இருக்கும்.
அந்த கதையை தாண்டி ஒரு வலிமையான நாவல் வந்தது இல்லை‌. அந்த படத்தில் நடித்தது பெருமையாக உள்ளதாக கூறி மகிழ்ந்தார்.

Leave A Reply

Your email address will not be published.