காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய கார் மீட்பு
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கோட்டப்பாளையத்தை சேர்ந்தவர் ஜான் (47). இவர் தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றி வருகிறார், இந்நிலையில் நேற்று மாலை மாராடி கிராமத்தில் இருந்து கட்டப்பள்ளி செல்வதற்காக தனது சொந்த காரில் தனியாக சென்று கொண்டிருந்தார்.அப்போது செல்லும் வழியே தரைப்பாலத்தில் காற்றாற்று வெள்ளம் அதிக அளவில் சென்று கொண்டிருந்தது – ஆனால் ஜான் தண்ணீர் குறைவாக வருவதாக கருதி தரைப் பாலத்தை எப்படியும் கடந்து விடலாம் என்று எண்ணி காரில் கடக்க முயற்சி செய்தார்.ஒருகட்டத்தில் தரை பாலத்தின் பாதி தூரம் சென்ற போது தண்ணீர் காரை இழுக்க ஆரம்பித்தது, இதனால் பயந்து போய் காரின் கதவை திறந்து ஜான் பத்திரமாக உயிர் தப்பினார்,மேலும் இது பற்றி நண்பர்கள் தகவல் தெரிவித்து காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய தனது காரை ஜேசிபி எந்திரத்தின் மூலம் பத்திரமாக மீட்டார்- இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பொதுவாக மழைக்காலங்களில் இதுபோன்று கிராமப்புற பகுதிகளில் தரைப் பாலத்தை கடக்கும்போது குறைந்த அளவிலான வெள்ளம் செல்வதாக எண்ணி ஆபத்தான முறையில் கடப்பது பல்வேறு நேரங்களில் விபரீதத்தை ஏற்படுத்தி விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.