ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

0 324
Stalin trichy visit

திருச்சி, அக். 15 ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடு முழுவதும் கட்டாய இந்தி மொழி அமல்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த அறிவிப்புக்கு தி.மு.க. தலைவரும், முதலமைச்சரும் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பை கண்டித்து அக்.15 அன்று தி.மு.க. இளைஞரணி மாணவரணி சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி தமிழ்நாடு முழுவதும் இன்று ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை கண்டித்தும், ஒரே நுழைவுத் தேர்வை எதிர்த்தும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக திருச்சியில் மேலசிந்தமாணி அண்ணாசிலை அருகில் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு, நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வையும் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஷ்குமார், மாணவரணி அமைப்பாளர் டாக்டர் இப்ராகிம் தலைமையில் நடைபெற்றது. கிழக்கு மாநகரச் செயலாளர் மு. மதிவாணன் முன்னிலை வகித்தார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதல் படி நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசின் இந்தி திணிப்புக்கும், நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வை எதிர்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மாவட்ட அவைத்தலைவர் கோவிந்தராஜன் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கே.என்.சேகரன், சபியுல்லா,வண்ணை அரங்கநாதன், குணசேகரன் செந்தில், லீலாவேலு, செங்குட்டுவன் மூக்கன், மலைக்கோட்டை பகுதிகழகச் செயலாளர் மோகன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக செயலாளர்கள் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள், தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.