அதிமுக பொன்விழா – முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அறிக்கை

0 342
Stalin trichy visit

திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் வெல்லமண்டி,ந. நடராஜன்வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கழக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரால் போற்றி வளர்க்கப்பட்டு பல்வேறு வரலாற்று சிறப்புகளைப் படைத்திட்ட “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” வருகின்ற 17.10.2022 திங்கள் கிழமை அன்று பொன்விழா ஆண்டை முன்னிட்டு கழக ஒருங்கிணைப்பாளர், முன்னாள் தமிழக முதல்வர், மாண்புமிகு எதிர்கட்சி துணை தலைவர் அண்ணன் 0.பன்னீர்செல்வம் அவர்கள், கழக இணை ஒருங்கிணைப்பாளர், முன்னாள் அமைச்சர், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான R.வைத்திலிங்கம், M.L.A. , கழக துணை ஒருங்கிணைப்பாளர், முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் ஆகியோர்களின் ஆணைக்கிணங்க திருச்சி மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.கழகம் சார்பாக திருச்சி கோர்ட் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். அவர்களின் திருஉருவ சிலைக்கு 17.10.2022 திங்கள் கிழமை காலை 10.00 மணி அளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.

அதுசமயம் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட கழக, பகுதி கழக, வட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.ஜி.ஆர். மன்றம், மாண்புமிகு அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்க பேரவை, வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, இலக்கிய அணி, மருத்துவ அணி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறையை சேர்ந்தவர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவினை சேர்ந்தவர்கள், வர்த்தக அணி, கலை பிரிவு, Ex.கோட்டத் தலைவர்கள், Ex.உள்ளாட்சி தலைவர்கள், பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குநர்கள், தலைமை கழக பேச்சாளர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

மேலும் அங்காங்கே உள்ள பகுதி கழகம், வட்ட கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்தும், கொடி கம்பங்களுக்கு வர்ணம் பூசி, கழக கொடியினை ஏற்றி ஏழை எளியவர்களுக்கு நலதிட்ட உதவிகள் செய்தும் சிறப்பாக கொண்டாடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

Leave A Reply

Your email address will not be published.