தீபாவளி பண்டிகை – கடைவீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

0 307
Stalin trichy visit

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் ஜவுளி உள்ளிட்ட பொருட்கள் வாங்க விடுமுறை தினமான நேற்று திருச்சி கடைவீதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. திருச்சி என்.எஸ்.பி.ரோடு, சிங்காரத்தோப்பு, பெரியகடைவீதி மற்றும் சின்னக்கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் குடும்பம், குடும்பமாக ஜவுளிக்கடைகளில் குவிந்தனர். போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக கடைவீதிக்குள் கார்கள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை அனுமதிக்காமல் போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

 

Leave A Reply

Your email address will not be published.