பெல் வளாகத்தில் தொழிற்கல்வி உள்ளுறை பயிற்சி : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்

0 368
Stalin trichy visit

திருவெறும்பூர் பெல் வளாகத்தில் தொழிற்கல்வி உள்ளுறை பயிற்சியை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்
தமிழக அரசானது தமிழகப் பள்ளிக்களில் பயிலும்மாணவ மாணவிகளின் கல்வி மேம்பாடு குறித்தும் அவர்களது எதிர்கால முன்னேற்றம் குறித்தும் தாயுள்ளத்தோடு அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது
இத் திட்டங்களில் ஒன்று “தொழில்கல்வி உள்ளுறை பயிற்சி” திட்டமாகும்
இத் திட்டமானது தமிழக அரசின் 2022 ஆம் ஆண்டு கொள்கையின்படி தொழிற்சாலைகளின் தற்கால தேவைக்கேற்ப தமிழ்நாட்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பில் தொழிற்கல்வி பயிலும் மாணவ மாணவியர்களின் வேலைவாய்ப்பினை உறுதி செய்கிறது
இத்திட்டத்தின் மூலம் பயிற்சி பெறும் மாணவ மாணவிகள் தங்களின் முடிவெடுக்கும் திறனை அதிகரிப்பதோடு தகவல் அறிந்த தொழில் தேர்வு செய்ய தொழில் முனைவோர் மனநிலையை அபிவிருத்தி செய்யவும் உதவுகிறது
இத்திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி இன்று திருவெறும்பூர் பாரத் பெல் நிறுவன தொழிற்சாலை பணிமனையில் நடைபெற்றது


நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து
தொழிற்கல்வி பயிலும் மாணவ மாணவிகளின் உள்ளுறை பயிற்சியை நேரில் பார்வையிட்ட
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் .மாணவர் இடையே பேசுகையில் ” நாட்டிலேயே தொழில் கல்வி உள்ளுறை பயிற்சி” என்னும் புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்து தமிழக மாணவ மாணவிகளின் எதிர்காலத்தை உறுதி செய்யும் நல்லதொரு வாய்ப்பு பெற்றமைக்காக பெருமை அடைகிறேன்” என்று கூறினார் அவர் மேலும் கூறுகையில் தமிழக அரசால் கொண்டு வரப்பட்டுள்ள அற்புதமான திட்டத்தைப் பயன்படுத்தி 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தொழில்கல்வி பாடம் பயிலும் மாணவ மாணவிகள் தகுந்த தொழில்துறையில் சிறப்புடன் பெற வாழ்த்துக்கள் ” என்றும் கூறினார்
நிகழ்ச்சியில் அமைச்சரோடு தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் திரு நந்தகுமார் .இல்லம் தேடி கல்வியின் மாநிலத் திட்ட இயக்குனரும் மற்றும் தமிழ்நாடு பொது நூலகத்துறை இயக்குனரும் ஆன இளம் பகவத் இ ஆப அவர்களும் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திருபிரதீப் குமார் இஆப அவர்களும்
தொழிற்கல்வி இணை இயக்குனர் திரு ஜெயக்குமார் அவர்களும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே என் சேகரன் ஒன்றிய கழகச் செயலாளர் கே எஸ் எம் கருணாநிதி கங்காதரன் மற்றும்
பி ஹெச் எல் தொமுச பொதுச் செயலாளர் கணேஷ் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்
தொழிற்கல்வி உள்ளுறை பயிற்சியின் மூலம் மாணவர்கள் தாங்களே விரும்பும் தொழிற்கல்வியை பெற்று அதன் மூலம் எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளும் வாய்ப்பை பெறுகிறார்கள் இதனால் எதிர்காலத்தில் தொழில் முனைவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு நாட்டின் தொழில் வளமும் பெருகும்
இவ்வாய்ப்பினை உரிய நேரத்தில் தந்த தமிழக அரசுக்கு மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் ஆசிரிய பெருமக்களும் நன்றி தெரிவித்தனர்

Leave A Reply

Your email address will not be published.