சிதலம் அடைந்த பள்ளி கட்டிடம் : அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு

0 304
Stalin trichy visit

திருவெறும்பூர் தொகுதியில் சிதலம் அடைந்த பள்ளி கட்டிடத்தை ஆய்வு செய்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட துவாக்குடி நகராட்சி , உட்பட்ட ராவுத்தன்மேடு அரசு உயர்நிலை பள்ளியில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு வகுப்பறைகள் RCC மேற்கூரை இடிந்து விழுந்தது. மேற்கண்ட கட்டிடத்தை புனரமைக்க வேண்டும். பொதுமக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆய்வு செய்தார் உடனடியாக கட்டிடத்தை சீரமைப்பதற்கு துறை சார்ந்த அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்
தற்போது இக்கட்டிடத்தில் செயல்பட்டு வந்த வகுப்பறைகள் அருகில் உள்ள மாற்று கட்டிடங்களுக்கு மாற்றப்பட்டு மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் மாவட்ட கல்வி அதிகாரி பாலமுரளி துவாக்குடி நகர் மன்ற தலைவர் காயம்பு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே என் சேகரன் ஊராட்சி மன்ற குழு உறுப்பினர் கே எஸ் எம் கருணாநிதி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளும் பள்ளி தலைமை ஆசிரியரும் உடன் இருந்தனர்

Leave A Reply

Your email address will not be published.