கள்ளக்காதலால் அரங்கேறிய படுகொலை-கணவன் வெறிச்செயல்…
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் முடி மண்டப வளாகத்தில் ஆட்டோ டிரைவர் கத்தியால் குத்தி படுகொலை. கள்ள காதலியின் கணவர் வெறிச்செயல்.
மண்ணச்சநல்லூர் காமராஜர் காலனியைச் சேர்ந்த ராமசாமி மகன் 41 வயதான சின்ராசு.. இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள். இவருடைய மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அதேபோல் மண்ணச்சநல்லூர் அருகே மேல சீதேவிமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்த பரமசிவம் மகன் 41 வயதான ராஜா என்கின்ற புல்லட் ராஜா. இவருடைய மனைவி 35 வயதான கிருஷ்ணவேணி. இந்நிலையில் புல்லட் ராஜாவின் மனைவிக்கும் சின்ராசுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. மனைவியை இழந்த சின்ராசு தனது மகள்களை பார்த்துக் கொள்வதற்காக புல்லட் ராஜாவின் மனைவியை தனது வீட்டிலேயே தங்க வைத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு புல்லட் ராஜாவின் மனைவி கிருஷ்ணவேணி தனது அக்கா மற்றும் அக்கா கணவருடன் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சின்ராசு ஆட்டோவில் வந்துள்ளனர் .இதை அறிந்த புல்லட் ராஜா பின் தொடர்ந்து வந்து சமயபுரம் கோயில் முடிகாணிக்கை மண்டப வளாகத்தில் சின்ராசுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தகராறு முற்றியதில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தில் குத்தியதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சின்ராசு பரிதாபமாக பலியானார். கொலை செய்த ராஜா என்கின்ற புல்லட் ராஜா அங்கிருந்து மனைவியை அழைத்துக்கொண்டு தப்பிச் சென்றார்.
இது குறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு தடவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் லீலி வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் லீலி கோயில் மண்ட வளாகத்தில் சிறிது தூரம் சுற்றி வந்து நின்றுவிட்டது. பின்னர் கொலை குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய ராஜாவை வலைவீசி தேடி வருகின்றனர்.கடந்த வருடம் மண்ணச்சநல்லூர் அருகே ஈச்சம்பட்டி ஏரியில் லாரி டிரைவர் கொலை வழக்கில் ராஜா என்கின்ற புல்லட் ராஜா கைதாகி சிறை சென்றார்.