முதல்வர் வருகையையொட்டி அமைச்சர்கள் ஆய்வு.
மணப்பாறை அருகே மொண்டிபட்டி காகித ஆலையில் அடுத்த மாதம் முதல்வர் வருகை தருவதை ஒட்டி அமைச்சர்கள் ஆய்வு.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்து மொண்டிபட்டி உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் அலகு 2-ல் அமைந்துள்ள ஆலை விரிவாக்கத்தின் முதல் கட்டமான உலக தரம் வாய்ந்த வன்மரக் கூழ் ஆலை அடுத்த மாதம் திறப்பு விழாவிற்கு தமிழக முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின். அவர்கள் வருகை தர உள்ளதால் இந்த வருகை ஒட்டி இன்று முன் ஆய்வு பணிக்காக நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இரண்டு அமைச்சர்களும் திறப்பு நிலை பணி எந்த அளவுக்கு நடைபெறுகின்றது என்று ஆய்வு செய்தார்கள். இந்த ஆய்வின் போது திருச்சி மாவட்ட ஆட்சியாளர் பிரதீப் குமார் மற்றும் வருவாய் துறையினர் காவல் துறையினர் என பலரும் கலந்து கொண்டனர்