ராமஜெயம் கொலை வழக்கு : சந்தேகத்துக்குரிய 12 பேர் நாளை நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன்

0 396
Stalin trichy visit

திமுகவின் முதன்மை செயலாளரும்,  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரான கே.என்.நேருவின்
சகோதரர்  ராமஜெயம் கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி விடியற்காலை நடைபயிற்சி
சென்றபோது மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருவளர்ச்சோலை
பகுதியில் ஆடு மேய்ப்பர்வர்கள் கொதொடங்கி சிபிசிஐடி, சிபிஐ, என்று பலரது கைமாறி சென்றும்
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குற்றவாளிகளைகண்டுபிடிக்க முடியாமல் நிலுவையிலேயே இருந்தது.தற்போது மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு நீதிமன்ற உத்தரவுபடி இதற்கென சிறப்புப் புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட்டது.  அதற்கென சிறப்பு தனிப்படை புலனாய்வு
எஸ்பி ஜெயக்குமார், டிஎஸ்பிடுத்த தகவலின் அடிப்படையில் உடல் கைப்பற்றபட்டு வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களுக்கு வலைவீசி தேடி வரும் நிலையில் இந்த வழக்கு உள்ளுர் காவல்துறையில்  மதன்,
ஞானவேல்,  இன்ஸ்பெக்டர் ஆகியோர் அடங்கிய சிறப்பு குழுவினர் வழக்கை தீவிரமாக
விசாரித்து வருகின்றனர்.

மேலும், ராமஜெயம் கொலை தொடர்பாக சிறையில் உள்ள கைதிகள்,  குற்ற வழக்குகளில் ஈடுபட்டு
சிறைக்குள் உள்ளவர்கள், ராமஜெயம் கடத்தப்பட்ட இடத்தில் இருந்து அந்த சமயத்தில் செல்போனில் பேசியவர்கள் என 1400-க்கும் மேற்பட்ட நபர்களை அழைத்து போலீஸார் தொடர்ந்து
விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், இவ்வழக்கில் உண்மைக்கண்டறியும் சோதனைக்கு
உட்படுத்தப்பட்ட 12 ரவுடிகளின் பட்டியலை இன்று சிறப்பு புலனாய்வுப்பிரிவு பேலீசார்
வெளியிட்டுள்ளனர்…

இதன்படி தமிழத்தின் பிரபல முக்கிய ரவுடிகள் திண்டுக்கல் மோகன் ராம்,
சாமி ரவி, நரைமுடி கணேசன், சீர்காழி சத்தியராஜ்,மாரிமுத்து, தினேஷ், திலிப் என்கிற லட்சுமி நாராயணன்,
தென்கோவன் என்கிற சண்முகம், ராஜ்குமார், சிவகுணசேகரன், சுரேந்தர், கலைவாணன் ஆகிய 12 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் சிறப்பு புலனாய்வு பிரிவினர் திருச்சி நீதிமன்றத்தில் பட்டியலில் குறிப்பிடப்பட்ட 12 பேரிடமும் உண்மை தன்மை அறியும் சோதனை நடத்துவதற்கு அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனு தாக்கல் இன் படி 12 பேரும் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப நேரில் நீதிமன்றத்தில் ஆஜராகி தங்களுடைய விளக்கத்தையும் தெரிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

உண்மை தன்மை கண்டறியும் சோதனை என்பது ஒரு மனித உரிமை மீறல் என்பதால் இதற்கான சிறப்பு அனுமதி டெல்லி தலைமையிடமிருந்து பெறப்பட்டு அதன் பிறகு பட்டியலில் குறிப்பிடப்பட்ட 12 பேருக்கும் உண்மைத்தன்மை சோதனை நடத்துவதற்கான நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

அதிலும் சோதனை நடத்துவதற்கு அனுமதி தரப்பட்டாலும் நீதிமன்றம் வாயிலாக 12 பேரின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்கள் குறிப்பிடும் தேதியில் இந்த சோதனைகள் நடத்தப்படும் இதற்கு சுமார் இரண்டு மாத கால அவகாசம் எடுக்கும் என்று தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.