ஹீலியம் சிலிண்டர் விபத்தால் கண்பார்வை பாதிக்கப்பட்ட மாணவர் மேல்சிகிச்சைக்கு ஏற்பாடு
திருச்சி, மெயின்கார்ட் கேட் பகுதியிலுள்ள ஒரு ஜவுளிக் கடை முன்பு ஹீலியம் சிலிண்டர் விபத்தினால் படுகாயமடைந்து கண்பார்வை பாதிக்கப்பட்ட மாணவன் ஜீவானந்தம் மேல் சிகிச்சைக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஏற்பாடு . இன்று மாணவனை சந்தித்து ஆறுதல் கூறி மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தொடர்ந்து உதவிகள் கிடைக்கும் என நம்பிக்கை அளித்தார்.