பல லட்ச ரூபாய் பண மோசடி : தனியார் அறக்கட்டளை நிறுவனர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

0 571
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுபட்டி பகுதியில் தனியார் அறக்கட்டளை சார்பில் அதன் நிர்வாக இயக்குனர் ரவிச்சந்திரன் வாழ்க்கை வரலாறு தொடர்பான புத்தக வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு இ;ன்று திருச்சியில் வெளியான நாளிதழ்களில் மிகப் பெரிய அளவுக்கு விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு இருந்தன. தப்பட்டம், பேண்டு வாத்தியம், குதிரை நடனம் என நிகழ்ச்சி களை காட்டினாலும் இந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை சார்பில் மணப்பாறை போலீசாரின் பாதுகாப்பு கேட்கப்பட்டிருந்தது. ஆனால் போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் நிகழ்ச்சிக்கு திரைப்பட நடிகை நமீதா உள்ளிட்ட 3 திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி நடத்திய தனியார் அறக்கட்டளையை பொறுத்தவரை பொதுமக்களிடம் ஒரு லட்சம் பெற்று அதை ஒரு கோடியாக வழங்கப்படும் என்று கூறி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆயிரக்கணக்கான மக்களிடம் பல கோடி பெற்றுள்ளனர். ஆனால் பொதுமக்கள் கொடுத்த பணத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை. மாறாக அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கியது போல் தான் பணம் பெறப்பட்டுள்ளது. பணம் கொடுத்து சில ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் கொடுத்த பணத்தையாவது கொடுங்கள் என்று பணம் கொடுத்தவர்கள் கேட்டும் அறக்கட்டளை நிர்வாகிகள் அதை பற்றி சற்றும் கண்டு கொள்ளவில்லை.

இந்நிலையில் தான் இன்று புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட திருச்சியை சேர்ந்த ஹாஜிரா என்ற பெண் மேடையில் ஏறி தான் 16 லட்சம் கொடுத்துள்ளாதாகவும் சில ஆண்டுகள் கடந்தும் பணம் கொடுக்காத நிலையில் என்னுடைய பணத்தை கொடுத்து விட்டு செல்லுங்கள் என்று கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். அதன் பின்னர் அறக்கட்டளை நிர்வாகிகளும், அதன் நிர்வாக இயக்குனர் ரவிசந்திரனும் மிரட்டும் தோணியில் பேசி அவரை ஓரமாக அமர வைத்தனர். இந்நிலையில் பணம் கொடுத்து ஏமாந்த பலரும் கோவத்தை வெளிப்படுத்தி சப்தம் போடவே அங்கிருந்த போலீசாரின் துணை மற்றும் பாதுகாப்போடு ரவிச்சந்திரன் புறப்பட்டு சென்றார். இதனால் மக்கள் தங்கள் உள்ளக் குமுறல்களை என்ன செய்வதென்று தெரியாமல் புலம்பிச் சென்றனர்.

இதற்கிடையில் இந்த நிகழ்ச்சிக்கு போலீசார் பாதுகாப்பு தர மறுத்த நிலையில் பிரச்சனை ஏற்படும் போது மட்டும் நடவடிக்கை எடுக்காமல் பல கோடி பணத்தை ஏமாற்றியவரை எப்படி அழைத்து சென்றனர் என்பதுடன் காவல்துறை உயரதிகாரிகள் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.