மாபெரும் ஆயுர்வேதிக் மருத்துவ விழிப்புணர்வு கூட்டம்

0 334
Stalin trichy visit

ஆர் சி மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் மற்றும் சங்கரா ஆயுர்வேதிக் மையம் இணைந்து நடத்திய மாபெரும் ஆயுர்வேதிக் மருத்துவ விழிப்புணர்வு கூட்டமானது குண்டூர் ஊராட்சி திருவளர்ச்சி பட்டி கிராமத்தில் நடைபெற்றது . குண்டூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த நிகழ்வை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஆசிரியர் சேசுராஜ் அவர்கள் வரவேற்றார். இந்த நிகழ்வில் சிறப்புரங்கராக கலந்து கொண்ட சங்கரா ஆயுர்வேதிக் சிகிச்சை மையத்துடைய இயக்குனர் மருத்துவர் சங்கரநாராயணன் அவர்கள் ஆயுர்வேதிக் சம்பந்தமான சிகிச்சை முறைகளை பற்றியும் இயற்கையாக கிடைக்கக்கூடிய மூலிகை வைத்து செய்யக்கூடிய ஆயுர்வேத முறையைப் பற்றியும் மாணவரிடமும் பொது மக்களிடமும் விளக்கி கூறினார். இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக நாட்டு நலப்பணித்திட்ட துணை அலுவலர் ஆசிரியர் லூயிஸ் அவர்கள் நன்றி கூறினார்

Leave A Reply

Your email address will not be published.