மரங்களை சேதப்படுத்தியதற்கு தண்ணீர் அமைப்பு கண்டனம்

0 455
Stalin trichy visit

திருச்சி ஜெயில் கார்னர் இருந்து பொன்மலைப்பட்டி செல்லும் பகுதியில் பல ஆண்டுகளாக மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பாக பாதுகாத்து வளர்க்கப்பட்ட மரங்களை ஜேசிபி எந்திரம் மூலம் கொடூரமாக வெட்டி சேதப்படுகிறது_ தண்ணீர் அமைப்பு கண்டிக்கிறது.

2016 ஆம் ஆண்டு மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பாக பொன்மலைப்பட்டி செல்லும் சாலையில் 100 மேற்பட்ட மரங்களை நட்டு பாரமரித்து வந்தார்கள்.

நன்றாக வளர்ந்த மரங்களை அரசு பணி என்று கூறி ஜேசிபி எந்திரம் மூலம் முறையற்ற முறையில் மரங்களை சேதப்படுத்தி வெட்டியும் உள்ளார்கள் மரக்கிளைகளை வெட்டும் முறையல்ல இதை தண்ணீர் அமைப்பு கண்டிக்கிறது.

நம் உயிர் வாழ காற்று, நிழல், பூ, பழங்கள் போன்ற நல்லது செய்யும் மரங்களுக்கு பாதுகாப்பு இல்லை.

மனிதன் இல்லாவிட்டாலும் மரங்கள் வாழும்; ஆனால், மரங்கள் இல்லாவிட்டால் மனிதன் வாழ முடியாது என்பதே உண்மை.

“மரம் வளா்ப்போம், மழை பெறுவோம்’, ‘வனங்களைக் காப்போம்’ என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வந்தபோதிலும், தொழிற்சாலைகளை நிறுவுதல், விமான நிலையங்களை அமைத்தல், ரயில் இருப்புப் பாதைகள் அமைத்தல், அணைகள் – பாலங்கள் அமைத்தல், சாலை அமைத்தல் மற்றும் விரிவாக்கம் செய்தல், கல்வி நிறுவனங்களை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மரங்களை அழித்ததில் அரசுதான் முக்கியப் பங்கு வகிக்கிறது.

விலங்குகளுக்கு நிபந்தனைகளின் படிதான் நடக்கிறதா என கண்காணிக்க Bule Cross, மனிதர்களுக்கு, விலங்குகளுக்கு, பறவைகளுக்கு பயன் தருகிற மரங்களை நிபந்தனைகளின் படிதான் நடக்கிறதா என கண்காக்க Brown Cross அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் தண்ணீர் அமைப்பு சார்பாக கேட்டுக் கொள்கிறது.

Leave A Reply

Your email address will not be published.