புள்ளம்பாடி வாய்க்காலில் தவறி விழுந்த மூதாட்டி பலி
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள வந்தலைக் கூடலூரில் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்ற மூதாட்டி புள்ளம்பாடி வாய்க்காலில் தவறி விழுந்து பலியானார்.
புள்ளம்பாடி அருகே வந்தலை கூடலூர் இறைவன் நகரைச் சேர்ந்தவர் 80 வயதான மேரி புஷ்பம். இவர் நேற்று காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக அப்பகுதியில் உள்ள புள்ளம்பாடி வாய்க்கால் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதமாக வாய்க்காலில் தவறி விழுந்து நீரில் மூழ்கினார். இது குறித்து புள்ளம்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த புள்ளம்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் கோபண்ணா தலைமையில் சிறப்பு நிலை அலுவலர் பாரதி வீரர்கள் சுரேஷ், மோகன்,கங்கை கொண்டான் உள்ளிட்டோ புள்ளம்பாடி வாய்க்காலில் சுமார் ஒரு மணி நேரம் மூதாட்டி தேடி வந்தனர்.ஆனால் அவரது உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் அங்கிருந்து 5 கிலோமீட்டர் தள்ளி உள்ள வாரண்டாம் பாளையத்தில் உள்ள புள்ளம்பாடி வாய்க்காலில் அவரது உடல் கரையோரம் மிதந்து வந்தது. இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் மூதாட்டியை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கல்லக்குடி போலீசா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இது குறித்து கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.