தொடர்ந்து ஏறி வரும் விலைவாசி உயர்வுக்கு ஒன்றிய அரசு தான் காரணம்-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் மகேந்திரன் பேட்டி..

0 275
Stalin trichy visit

தொடர்ந்து ஏறி வரும் விலைவாசி உயர்வுக்கு ஒன்றிய அரசு தான் காரணம்.

மணப்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் மகேந்திரன் பேட்டி.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் இந்திய கம்யூஸ்ட் கட்சி சார்பில் நவம்பர் புரட்சி தின கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் தேசியக்குழு உறுப்பினருமான மகேந்திரன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில். மின் கட்டணம், வரி உயர்வு, பால் கட்டண உயர்வு என்பது ஏழை மக்களை மிகுந்த வேதனைக்கு ஆளாக்கும். ஆகவே அதை முறைப்படுத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விலைவாசி உயர்வுக்கு காரணம் மத்திய அரசு தான். தமிழகத்தில் பாஜக காலூன்ற வேண்டும் என்பதால் பல்வேறு விலைவாசி உயர்வை ஏற்படுத்தியதுதான் தமிழகத்திலும் விலை வாசி உயர்வுக்கு காரணமாக அமைந்திருக்கின்றது. இதே போல் அனைத்திற்கும் ஒன்றிய அரசு தான் காரணம் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். தமிழக மக்களின் சுமையை குறைக்கவேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது எனவே விலை உயர்வை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் மத்திய அரசின் கார்ப்பரேட் ஆதரவு பொருளாதார கொள்கைகள் தான் விலைவாசி ஏற்றத்திற்கு காரணம் என்றார்.

தி.மு.க தலைமையிலான கொள்கை கூட்டணி வரும் தேர்தல்களிலும் தொடரும் என்பதோடு எடப்பாடி பழனிச்சாமி சொல்லும் கூட்டணி என்பது கடற்கரை மணலில் கட்டப்பட்ட வீடு போன்றது. விரைந்து கொஞ்சம் கொஞ்சமாக இடிந்து விழுந்து விடும் என்றார்.
மேலும் மொண்டிப்படிடடி;யில் உள்ள தமிழ்நாடு காகித தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் காற்றுமாசை உடனடியாக சரிசெய்திட வேண்டும் இல்லையேல் போராட்டம் நடத்தி தீர்வு காணப்படும் என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.