திருச்சி மாவட்டத்தில் 23 லட்சத்து 1278 வாக்காளர்கள் : பட்டியல் வெளியீடு
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளில் 2023 ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதனிடையே வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ள ஏதுவாக வரைவு வாக்காளர் பட்டியலை இன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
அதன்படி திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளில் 11 லட்சத்து 15 ஆயிரத்து 975 ஆண் வாக்காளர்கள், 11 லட்சத்து 85 ஆயிரத்து 14 பெண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தார் 289 பேர் என மொத்தம் 23 லட்சத்து 1278 வாக்காளர்கள் உள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 55 ஆயிரத்து 169 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். லால்குடியில் ஒரு வாக்குச்சாவடி கூடுதலாக சேர்க்கப்பட்டதுடன் மாவட்டத்தில் 2544 வாக்குச்சாவடிகள் உள்ளன.
75 சதவீதம் பேர் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண இணைப்பு செய்துள்ளனர். திருச்சி
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளில் 2023 ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதனிடையே வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ள ஏதுவாக வரைவு வாக்காளர் பட்டியலை இன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
அதன்படி திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளில் 11 லட்சத்து 15 ஆயிரத்து 975 ஆண் வாக்காளர்கள், 11 லட்சத்து 85 ஆயிரத்து 14 பெண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தார் 289 பேர் என மொத்தம் 23 லட்சத்து 1278 வாக்காளர்கள் உள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 55 ஆயிரத்து 169 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். லால்குடியில் ஒரு வாக்குச்சாவடி கூடுதலாக சேர்க்கப்பட்டதுடன் மாவட்டத்தில் 2544 வாக்குச்சாவடிகள் உள்ளன.
75 சதவீதம் பேர் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண இணைப்பு செய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக திருச்சி 7வது இடத்தில் உள்ளது